cinima news:கர்ப்பத்தை கலைத்த சமந்தா? சைதன்யாவுக்கு சோபிதாவுடன் முன்பே தொடர்பு – பிரபலம் பகீர்!

சமந்தா குறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பகிர்ந்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.

பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யா. இவர் நடிகை நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர்.

அதன்பிறகு இருவருமே தங்களது படங்களில் பிஸியாக நடித்து வந்த நிலையில், நாக சைதன்யா – சோபிதா துலிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக நடிகர் நாகர்ஜூனா தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்துள்ள பத்திரிகையாளர் சபிதா ஜோசப், “நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்குமிடையே விவாகரத்துக்கு காரணமாகப் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. சிலர் குழந்தை பெற்றுக்கொள்ள தயங்குவார்கள். எங்கே குழந்தை பெற்றால் மார்க்கெட் போய்விடுமோ என நடிகைகள் அஞ்சுவார்கள்.

குழந்தை பெற்றுக்கொள்ள நாக சைதன்யாவுக்கு விருப்பம் என்றும்; சமந்தா அதற்கு மறுத்தார் என்றும்; முக்கியமாகக் கர்ப்பத்தை கலைத்தார் அதுதான் விவாகரத்துக்கு காரணம் என்று ஊடகங்களில் சொல்கிறார்கள். அது உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை.

அதேசமயம் சமந்தாவுடன் திருமண உறவில் இருந்தபோதே நாக சைதன்யாவுக்கு சோபிதாவுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஏனெனில் சைதன்யாவும், சோபிதாவும் நான்கு வருடங்களாகக் காதலித்துவருகிறோம் என்று சொல்கிறார்கள். சமந்தா விவாகரத்து நடந்து அத்தனை வருடங்கள்தான் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *