Thalapathy Vijay Library: “தளபதி விஜய் நூலகம்” திறப்பு!

Advertisements

“தளபதி விஜய் நூலகம்” என்ற பெயரில்  நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் நூலகங்கள் துவங்க உள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.

புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் தற்போது முதற்கட்டமாக “தளபதி விஜய் நூலகம்” திட்டம் நாளைச் சனிக்கிழமை (18/11/2023) அன்று காலை 10.35 மணியளவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாகத் தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, CTO காலனி, மேற்கு தாம்பரத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்து துவக்கி வைக்கிறார்.

Advertisements

அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாகப் பல்லாவரம் தொகுதியில் தாம்பரம் மாநகராட்சி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் “தளபதி விஜய் நூலகம்” திட்டத்தினை துவக்கி வைக்கிறார்.

அதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும்,  அரியலூர்,  நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு,  வடசென்னை கிழக்கு,  வடசென்னை வடக்கு இளைஞரணி மற்றும் வேலூர் தொண்டரணி ஆகிய மாவட்டங்களைச் சேர்த்து 11 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது.

மேலும் இரண்டாம் கட்டமாக வரும் 23.11.2023 (வியாழக்கிழமை) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து இடங்களிலும்,  கோவை மாவட்டத்தில் நான்கு இடங்களிலும்,  ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் தென்காசி மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் சேலம்,  புதுக்கோட்டை,  கரூர்,  சிவகங்கை,  திண்டுக்கல் மேற்கு,  கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்த்து 21 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது. ”இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *