தளபதி 68 படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக விஜய், வெங்கட் பிரபு, ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்க சென்றுள்ளதாகத் தகவல் பரவிவருகிறது…
நடிகர் விஜய்யின் லியோ பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளது.லியோ படக்குழுவினர் படப்பிடிப்பிற்கு பிந்தைய தயாரிப்பு பணிகளில் தீவரமாக உள்ளனர்.
லியோ வெளியாகும் முன்னரே, தளபதி 68 குறித்த அப்டேட் வெளியானது. விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.தற்போது, இணையத்தில் விஜய்யின் புகைப்படம் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.
தளபதி 68 படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக விஜய், வெங்கட் பிரபு, ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்க சென்றுள்ளதாகத் தகவல் பரவிவருகிறது.
இப்புகைப்படம் அமெரிக்காவில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

