
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே நடிகை தாக்கபட்ட வழக்கில் சதி திட்டம் தீட்டியதில் தனது முன்னாள் மனைவியும் பிரபல நடிகையுமான மஞ்சூவாரியருக்கு பங்குள்ளது என எர்ணாகுளம் நீதிமன்ற வளாகத்தில் பிரபல நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் கொச்சியில் கடந்த 2017ஆம் வருடம் பிப்ரவரி 17ஆம் தேதி கொச்சி நகர பகுதியில் வாகனத்தில் பிரபல நடிகை தாக்கபட்டதாக கொச்சி நெடும்பாசேரி காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கபட்டது. இதில், நடிகையை தாக்கிய வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் உட்பட குற்றவாளியாக சேர்க்கபட்டு கைது செய்யபட்டு சிறையிலடைக்கபட்டனர். இந்த வழக்கின் விசாரணை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றத்தில் சுமார் 7ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில்,வழக்கில் 8 வது குற்றவாளியாக சேர்க்கபட்ட நடிகர் திலீப் குற்றவாளியில்லை என வழக்கிலிருந்து இன்று விடுவிக்கபட்டு எர்ணாகுளம் முதன்மை நீதிமன்ற நீதிபதி ஹனியம் வர்கீஸ் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த நடிகர் திலீப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது, உண்மை வென்றது என்றும் இந்த வழக்கில் தனது உதவியாளரை கூட்டுசேர்த்து சதிதிட்டம் தீட்டியது தனது முன்னாள் மனைவி நடிகை மஞ்சூவாரியரும் தான் தன்னை குற்றவாளியாக்க முயற்சிசெய்ததாகவும் தெரிவித்தார். மேலும் தான் குற்றவாளியில்லை என அறிவிக்கபட்டதற்கு இறைவனுக்கு நன்றி கூறுவதாகத் தெரிவித்தார்.


