
உக்ரைன் போர் நிறுத்த திட்டத்தை ரஷியா ஏற்றுக் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
உக்ரைன் , ரஷியா இடையே ஆயிரத்து 383 ஆவது நாளாக போர் நீடித்து வரும் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதை தொடர்ந்து, போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் உக்ரைன் – ரஷியா போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டொனால்டு டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பேசி வருவதாகக் கூறினார். இந்தப் பேச்சவார்த்தையின் முடிவில் போர் நிறுத்தம் மற்றும் அமைதி திட்டத்தை ரஷியா ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அது தனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், இந்த திட்டத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புரிந்து கொள்ளவில்லை என்றும் அது தனக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்றும் டொனால்டு டிரம்ப் கூறினார்.



