Chennai : பிரபல தனியார் உணவுக் கூடத்தில் தீ விபத்து..!

சென்னையில் உள்ள பிரபல தனியார் உணவுக் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை, பட்டாபிராம் அருகே சித்துக்காட்டில் தனியார் உணவு கூடம் இயங்கி வருகிறது.
இங்கிருந்து சென்னை மற்றும் அதைச்சுற்றியுள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்குக் காலை, மதியம், இரவு உணவு விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.  நேற்று எதிர்பாராத விதமாக பாய்லர் அமைக்கப்பட்டிருந்தப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
பாய்லர்க்கு அருகே எண்ணெய் பெட்டி அதிகமாக இருந்ததால் தீ  வேகமாக எரியத்  துவங்கி  அனைத்து இடத்திலும்  பரவியது.
உடனே தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த தீயை அணைத்தனர.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *