பாரதி விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க முடிவு..!

ஆண்டுதோறும் வழங்கப்படும் பாரதி விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் ரவி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி திருவிழா 2025 எனும் தலைப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் பாரதியாரின் கொள்ளு பேரன் ராஜ்குமார் பாரதி, தொழிலதிபர்கள் நல்லி குப்புசாமி செட்டியார், வி.ஜி.சந்தோஷம், ஆகியோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து, வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் ரவி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு எட்டயபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் இருந்து எட்டயபுரம் அரண்மனைக்கு ஜதி பல்லக்கில் பாரதியாரின் திருவுருவ சிலையை வைத்து  கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அரண்மணை வளாகத்தில் பாரதியார் சிலை வைக்கப்படுகிறது என்றார். இதை யடுத்து, ஆண்டுதோறும் வழங்கப்படும் பாரதி விருதை இதற்கு முன் ‘ஏபிஜே அப்துல் கலாம், கிருஷ்ணா ஐயர்’ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *