Actor Devan: கேரளா பாஜக மாநில துணைத் தலைவராக நியமனம்!

Advertisements

கேரள மாநிலத்தின் பாஜக வின் துணை தலைவராக பிரபல  திரைப்பட நடிகர் தேவன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநிலத்தின் தலைவரான  K.சுரேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரான தேவன் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் சந்தனக்காற்று படத்தில் விஜயகாந்த் உடன் நடித்திருப்பார். நடிகர் தேவன் பல மொழிகளில் நடித்துள்ளார்.

அரசியலில்  ஆர்வம் கொண்ட அவர் பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்த நிலையில் , 2001-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

நடிகர் தேவன் 2004-ஆம் ஆண்டு கேரளா மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கி மக்களுக்கு சமூகப் பணியாற்றி வருகிறார். நடிகர்  சங்கத்தின் மூலமாகவும்  இவருக்கு மக்களிடயே நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் , கேரளாவின் பாஜக தலைவரான K.  சுரேந்திரன் நடிகர் தேவனை கேரள மாநில பாஜகவின் துணைத் தலைவராக நியமித்துள்ளார். தேவன் ஏற்கனவே இருமுறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். பாஜக வின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் நடிகர் தேவன்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *