கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல – நடிகர் அஜித்குமார் கருத்து..!

கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல என்று பிரபல நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். கரூரில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரபல நடிகர் அஜித்குமார் ஹாலிவுட் செய்தியாளரைச் சந்தித்தப் போது, கரூர் துயர சம்பவம் தொடர்பாக மனம் திறந்து பேசினார்.
இதில் அவர், நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்றும். கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல என்றும், நாம் அனைவருக்கும் பொறுப்புதான் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, அவர், கிரிக்கெட்டில் கூட்டம் கூடினாலும் இப்படி நடப்பதில்லை. ஆனால், தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி, பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் மட்டும் ஏன் இப்படிநடக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
இதனால், நம் திரையுலகை உலகளவில் தவறாகக் காட்டுகிறது. இதையடுத்து, ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம்.
ஆனால், உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம். அன்பை காட்ட வேறு வழிகள் உண்டு என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *