
கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இந்து தர்மத்தை காப்பதற்காக நித்தியானந்தா உயிர் தியாகம் செய்ததாகவும் அவர் வீடியோ பிரசங்கத்தில் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலையை சேர்ந்தவர் நித்தியானந்தா. இவர் அங்கிருந்து கர்நாடகா மாநிலம் பிடரிக்கு இடம் பெயர்ந்தார்.
41 இடங்களில் ஆசிரமங்களை அமைத்த நித்தியானந்தா, ஒரு பிரபல நடிகையுடன் தனிமையில் இருந்ததாக வீடியோ வெளியானது. ஆனால் இதை அந்த நடிகை மறுத்தார். இந்த நிலையில் நித்தியானந்தா தனது பெண் சீடர்களுக்கு ஏதோ கொடுத்து அவர்கள் தங்களது வீட்டுக்கு திரும்பாத நிலையை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பிடரி, அகமதாபாத் என 41 இடங்களில் ஆசிரமங்களை அமைத்த நித்தியானந்தா, ஒரு பிரபல நடிகையுடன் தனிமையில் இருந்ததாக வீடியோ வெளியானது. ஆனால் இதை அந்த நடிகை மறுத்தார். இந்த நிலையில் நித்தியானந்தா தனது பெண் சீடர்களுக்கு ஏதோ கொடுத்து அவர்கள் தங்களது வீட்டுக்கு திரும்பாத நிலையை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் அவர் மீது பெங்களூரில் பாலியல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் தலைமறைவானதாக சொல்லப்பட்டது. ஒரு திடீரென கைலாசா எனும் தனித்தீவை உருவாக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.இது இந்துக்களுக்கான நாடு என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நாட்டுக்கு என தனி கரன்சி, பாஸ்போர்ட், தனிக் கொடி உள்ளிட்டவைகளையும் அவர் நிர்மானித்தார்.
மேலும் தனது நாட்டில் தொழில் தொடங்குமாறும் அவர் தமிழகத்தில் உள்ள சில மாவட்ட மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.இது உண்மையா என தெரியவில்லை. ஒரு வேளை வழக்குகளில் இருந்து தப்பிக்க இது போல் நாடகத்தை நித்தியானந்தாவும் அவருடைய சீடர்களும் நடத்துகிறார்களா? என்பதும் கேள்வியாக இருக்கிறது.



