30 பாலஸ்தீனியர்களின் உடல்கள் காசா சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைப்பு..!

இஸ்ரேல் ராணுவம் 30 பாலஸ்தீனியர்களின் உடல்களை காசா சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைத்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெறுகிறது.

இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலையீட்டின்படி போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு, சண்டை தற்காலிகமாக ஓய்ந்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தப்படி, ஹமாஸ் வசம் உள்ள பிணைக்கைதிகள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் இரண்டு பிணைக்கைதிகளின் உடலை ஒப்படைத்த நிலையில், பதிலுக்கு 30 பாலஸ்தீனியர்களின் உடல்களை இஸ்ரேல் ராணுவம் ஒப்படைத்தது.

இதுவரை காசா அதிகாரிகளிடம் 195 பாலஸ்தீனியர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *