Advertisements

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை அதிமுக தலைவர்கள் என்னை திட்டிக் கொண்டே இருக்கிறார்கள். நான் பாரதிய ஜனதா கட்சியை விட்டு கிளம்ப போகிறேன் என்று பேசிய பேச்சு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பணியாற்றிய அண்ணாமலை மிக குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் . தமிழ்நாட்டில் காலூன்றவே முடியாத நிலையில் இருந்த பாரதிய ஜனதா கட்சி அண்ணாமலையின் வரவால் புத்துயிர் பெற்றது . தற்பொழுது திமுக அதிமுக போல் பாரதிய ஜனதா கட்சியும் ஒரு முக்கிய கட்சியாக தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது .
இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்தவரையில் அண்ணாமலைக்கு ஆதரவாக ஏராளமான பாஜகவினர் பின்புலத்தில் இருக்கிறார்கள் . பாரதிய ஜனதா கட்சிக்கு நயினார் நாகேந்திரன் தலைமை பொறுப்பேற்ற பிறகு தனது பணிகளை சரியாக செய்யவில்லை தொண்டர்களை உற்சாகப்படுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால் பாரதிய ஜனதா கட்சியை ஒரு சதவீதம் கூட வளர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது .
இதனிடையே நைனார் நாகேந்திரனுக்கும் அண்ணாமலைக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது. அண்ணாமலையை பொருத்தவரையில் டெல்லி மேலிடத்திலே ஏதாவது பதவி தருவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால் எந்தவித பதவியும் இதுவரை வழங்கவில்லை .
இதனால் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக அவ்வப்போது கொடி பிடித்து வருகிறார் சமீபத்தில் சென்னையில் நடந்த பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை பின்னர் முக்கிய தலைவர் அவரை வீட்டில் சந்தித்து மதியத்துக்கு பிறகு அந்த கூட்டத்துக்கு அழைத்து வந்தார் .
இதற்கு இடையே அண்ணாமலை புதிய கட்சி தொடங்கலாம் என்று பரவலாக பேச்சு எழுந்தது . இந்த நிலையில் திடீரென அமித்ஷாவுக்காகத்தான் நான் கட்சியில் இருக்கிறேன் என்னை அதிமுகவினர் தொடர்ந்து திட்டி வருகிறார்கள். நான் பாரதி ஜனதா கட்சியை விட்டு கிளம்ப தயாராக இருக்கிறேன் என்று அவர் பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
கோவையில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் பொழுது தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் 888 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை ஆதாரப்பூர்வமாக கடிதம் எழுதி அனுப்பி உள்ளது . ஆனால் இது குறித்து தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுக்கின்றனர் . இதுவே வேறு அரசாங்கம் ஆக இருந்தால் ராஜினாமா செய்திருப்பார்கள். முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு எஃப் ஐ ஆர் நடவடிக்கை எடுக்க வேண்டும் .எஃப் ஐ ஆர் போடாமல் அமலாக்க துறையால் நடவடிக்கை எடுக்க முடியாது.
இது பற்றி வாய் திறக்காத முதல்வர் பிரதமர் மோடி பற்றி தவறாக விமர்சனம் செய்து வருகிறார் .என்னை பொறுத்தவரையில் தமிழகத்தில் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் தூய அரசியலைக் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்போடு பயணித்து வருகிறேன் .தமிழகத்தில் நல்ல அரசியல் கூட்டணி அமைய இன்னும் காலம் இருக்கிறது நான் ஒரு தொண்டனாக இருக்கிறேன்.
நான் முதல் முறை அரசியல்வாதி. என்னால் ஒரு கட்சி துவங்கி நடத்த முடியும் என நினைக்கிறீர்களா?மோடி மீது நான் வைத்துள்ள நம்பிக்கை இம்மிஅளவு குறையாது சில சமயம் தலைவர்கள் சொல்வதால் மனசாட்சிக்கு எதிராக கூட பேசுகிறேன் பொறுத்திருந்து பார்ப்போம் நல்லது நடக்கும்.
இன்றைக்கும் நான் அதிமுகவை பற்றி பேசவில்லை. ஆனால் அந்த கட்சியை சேர்ந்த எத்தனையோ தலைவர்கள் என்னை திட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அமித்ஷாவிடம் கொடுத்த வார்த்தைக்காக அமைதியாக இருக்கிறேன் .காலம் வரும் பொழுது நான் பேசுவேன் .
நான் மோடிக்காகவும் அமித்ஷாவுக்காகவும் தான் என் வேலையை விட்டு வரவேண்டிய சூழ்நிலை வந்தது இல்லை என்றால் நான் அந்த வேலையை விட்டு இருக்க மாட்டேன் தமிழ்நாட்டில் நல்ல அரசியலை கொடுப்பதற்கான கூட்டணி அமையும் என்ற எண்ணத்தில் தொண்டனாக என் பணிகளை செய்து வருகிறேன் . யார் இருக்க வேண்டும் யார் இருக்கக் கூடாது என்ற கருத்தை சொல்வதற்கு எனக்கு அதிகாரம் இல்லை பிடித்திருந்தால் இருப்பேன் பிடிக்கவில்லை என்றால் கிளம்பி விவசாயம் பார்க்க போய் விடுவேன். நான் கைகாசு செலவு செய்துஅரசியலில் இருக்கிறேன், பிடிக்கவில்லை என்றால் அதே வேலையை சமூக இயக்கமாக மாற்றி பொதுமக்களுக்கு தொண்டு செய்வேன்.
நான் புதிய மாற்றத்திற்காக வந்திருக்கிறேன் சற்று பொறுத்திருங்கள் சரியான நேரத்தில் பேசுகிறேன் முதல் தலைமை அரசியல்வாதியாக தமிழகத்தில் புதிய மாற்றத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறேன். சிலது நேரம் மனசாட்சிக்கு எதிராகவும் பேசுகிறேன். மனசாட்சி ஒன்று சொல்கிறது வாய் ஒன்று சொல்கிறது. அதிமுகவில் நடக்கும் எதற்கும் நான் பொறுப்பல்ல எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம் என்று அதிமுக தலைவர்கள் என்னை ஏன் திட்டுகிறார்கள் என்று தெரியவில்லை .
நான் திரும்ப பேசுவதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிடும் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார் . அவர் பேச்சில் குறிப்பிடும் பொழுது உங்களுக்கு பிடித்திருந்தால் நான் இருப்பேன் அல்லது கிளம்பி விடுவேன் என்று கூறியதோடு, சற்று பொருத்திருங்கள் சரியான நேரத்தில் பேசுகிறேன்… முதல் தலைமை அரசியல்வாதியாக மாற்றத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறேன் நான் நினைத்தால் இதே வேலையை சமூக இயக்கமாக மாற்றி பொதுமக்களுக்கு தொண்டு செய்வேன் அந்த மாற்றத்திற்காக காத்திருக்கிறேன் என்று அவர் கூறியது மிக முக்கிய கருத்தாக பார்க்கப்படுகிறது .
ஏற்கனவே நெல்லையில் அண்ணாமலை நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு இயக்கம் தொடங்கப்படுகிறது. இது தொடர்பாக ஜெம் தொலைக்காட்சி சிறப்பு செய்தி வெளியிட்டது . இதே போல் டெல்லியை மையமாக வைத்து அண்ணாமலை அன்பு கூட்டம் என்ற அமைப்பும் செயல்பட்டு வருகிறது. இதில் 75 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் இவர்கள் சமீபத்தில் தமிழ்நாட்டிலும் கூட்டம் நடத்தி இருக்கிறார்கள் .
இந்த நிலையில் ஏற்கனவே அண்ணாமலையிடம் புதிய கட்சி தொடங்குவீர்களா என்று கேட்டபோது நிச்சயமாக கட்சி தொடங்கினால் பத்திரிகையாளர்களை அழைத்து பேசுவேன் நீங்கள்தான் விளக்கு ஏற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் .
ஆனால் இப்போதைய அவரது பேச்சு குதர்க்கமாக இருக்கிறது . சூசகமாக அவர் பேசிய பேச்சிலிருந்து பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விரைவில் விலகி புதிய கட்சி தொடங்குவார் என தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே செங்கோட்டையன் தலைமையில் டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் சசிகலா ஆகியோர் இணைந்து புதிய அணி ஒன்றைத் தொடங்கும் சூழ்நிலையில் அண்ணாமலையும் புதிய அணியை தொடங்குகிறார். இதனால் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ இருக்கிறது. அடுத்த கட்டமாக அண்ணாமலை என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Advertisements





