Accident: கண்டைனர் லாரிமீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

Advertisements

திருத்தணி அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டைனர் லாரி பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை இந்தப் பகுதியில் உள்ள ஆற்காடு குப்பம் என்ற பகுதியில் வடநாட்டு கண்டைனர் லாரி பழுதாகி நின்று கொண்டிருந்தது.

இதன் பின்புறம் திரு மீசை இருந்து வந்த இருசக்கர வாகனம் இன்று அதிகாலை கண்டெய்னர் லாரி பின்புறம் மோதி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் சம்பவ இடத்தில் உடல் துடித்து இறந்து போனார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கனகம்மா சத்திரம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றித் திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சம்பவ இடத்தில் தேசிய நெடுஞ்சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போலீசார் சீர் செய்தனர்.

போலீசார் இறந்து போனவர்குறித்து கூறுகையில் இறந்து போனவர் சௌந்தரராஜன் வயது (46) இவர் திருமீசை என்ற பகுதியிலிருந்து திருத்தணி நோக்கி வரும்போது ஆற்காடு குப்பத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இரண்டு நாட்களாகப் பழுதாகி நின்ற லாரி இதன் பின்புறம் மோட்டார் சைக்கிளை மோதிச் சௌந்தரராஜன் இறந்துள்ளார்.

இறந்து போனவருக்குத் திருமணம் ஆகி மனைவி ஒரு மகள் ஒரு மகன் இருக்கிறார்கள். இவர்கள் திருத்தணியில் அரக்கோணம் சாலை பழைய ரயில்வே குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றனர்
என்று தெரிவித்துள்ளார்.

போலீசார் சம்பவம்குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *