
பல்லடம் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பலியானார்.இந்தசம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூரை எடுத்த கள்ளிமேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவருக்குச் சுதர்சனா என்ற மூன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று சுதர்சனா பள்ளி விடுமுறை என்பதால் அவரது சித்தி வீடான ஞான சௌந்தரி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் சித்தி வீட்டுக்கு வந்த சுதர்சனா தனது அண்ணன் கவின் மற்றும் ரிஷ்வந்த் ஆகியோருடன் விளையாண்டு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சிறிது நேரத்திற்கு பின்னர் சிறுமி சுதர்சனா காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரது சித்தி மற்றும் உறவினர்கள் சிறுமியைத் தேடியபோது வீட்டின் அருகே உள்ள ஐந்து அடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சிறுமி மீட்ட உறவினர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சிறுமியை எடுத்துச் சென்றனர்.
மேலும் அங்குச் சிறுமையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த அவிநாசி பாளையம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று சிறுமி உயிர் இழந்த காரணம்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்லடம் அருகே மூன்றரை வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

