Thiruttani: சீட் பிடிப்பதில் தகராறு..17-வயது சிறுவனைப் பேட் மற்றும் ஸ்டெம்பால் தாக்கிய இளைஞர்கள்!

Advertisements

திருத்தணி அருகே தனியார் தொழிற்சாலைக்குச் சொந்தமான பேருந்தில் சீட் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதில்   சிறுவனைக் கடத்திச் சென்று இளைஞர்கள் கிரிக்கெட் மைதானத்தில் பேட்  மற்றும்  ஸ்டெம்பால் சரமாரியாகத் தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள கோரமங்கலம் காலனியை, சேர்ந்த குமார் செருக்குனூர் காலனியை, சேர்ந்த விமல்ராஜ் இருவரும் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தொழிற்சாலை பேருந்தில் பயணம் செய்யும்போது சீட் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அவர்களுடைய முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. செருக்குனூர் கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜை கோரமங்கலம் காலனி சேர்ந்தவர்கள் தாக்கியவர்களில் இடம் பெற்றிருந்த  கோரமங்கலம் காலனியைச் சேர்ந்த சஞ்சய் என்ற 17-வயது சிறுவன் மூன்று நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் கே.ஜி.கண்டிகைக்கு சென்று கொண்டிருந்தபோது அவரைச் செருக்கனூர் காலனியைச் சேர்ந்த வாலிபர்கள் மடக்கி பிடித்துக் கடத்திச் சென்று அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் வைத்துப் பேட் மற்றும் ஸ்டெம்பால் சரமாரியாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இச்சம்பம் தொடர்ந்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து செருக்கனூர் காலனியைச் சேர்ந்த புஷ்பராஜ், சூர்யா, தமிழ்செல்வன், சுஜன் ராஜ் உட்பட ஆறு பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *