Advertisements

பணியில் இருந்த தண்டனைக் கைதி இன்று அதிகாலை தப்பியோடினார்.
கோவை: காந்திபுரம் பகுதியில் சிறைத்துறை நடத்தும் பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த தண்டனைக் கைதி இன்று அதிகாலை தப்பியோடினார். கூடலூர் பகுதியைச் சேர்ந்த விஜய் ரத்தினம், கடந்த 2017ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைதாகி தண்டனை பெற்று வருபவர்.இந்த நிலையில் காந்திபுரம் பகுதியில் சிறைத்துறை நடத்தும் பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த கைதி விஜய் ரத்தினம் இன்று அதிகாலை தப்பியோடினார். தப்பியோடி கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.
Advertisements

