IPL Final Match : இன்று பெங்களூரு – குஜராத் அணிகள் மெகா மோதல்.!

கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்றிரவு 7:30 மணிக்கு விறுவிறுப்பாகத் தொடங்குகிறது.

இந்த மெகா பலப்பரீட்சையில், ஐபிஎல் வரலாற்றில்  5ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ள பெங்களூரு அணியும், 3ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள பலம் வாய்ந்த குஜராத் அணியும் நேருக்கு நேர் களம் காண்கின்றன.

ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒருமுறை ஐபிஎல் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை சுவைத்துள்ளன. இந்த நிலையில், இன்றைய போட்டியில் வென்று தங்களது 2ஆவது ஐபிஎல் மகுடத்தை சூடப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி அணி எது என்ற பலத்த எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் காத்துக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *