
டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இருந்தாலும் ஆம் ஆத்மி- பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
மூன்று கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளன. ஆம் ஆத்மி, பாஜக-வினர் ஒருவருக்கொருவர் மாறிமாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று பாஜகவின் பூத் அளவிலான தொண்டர்களுடன் உரையாடினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது-
டெல்லியில் இலவச சுகாதாரத்திற்கான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைச் செயல்படுத்த Aapda-விடம் (ஆம் ஆத்மி) கோரிக்கை வைத்திருந்தோம். அவர்கள் திட்டத்தைச் செயல்படுத்த விரும்பவில்லை.
இந்தத் திட்டத்தால் ஏராளமான பலன் கிடைக்கும் என்பதை டெல்லி மக்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நடுத்தர வர்க்கத்தினர் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு எனப் பாஜக கருதுகிறது.
நடுத்தர வர்க்கத்தினரின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு நாட்டில் அனைத்து நவீன வசதிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்.
ஆனால் டெல்லியில் ஆம் ஆத்மி டெல்லி மக்களுக்குப் பிரச்சனைகளைக் கொடுத்து வருகிறது.
