சிவில் சர்வீஸ் தேர்வுக்கான தேதிகளை வெளியிட்டது யுபிஎஸ்சி!

Advertisements

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான தேதிகளை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீஸ் முதல்நிலைத்தேர்வு வரும் மே 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கு இன்று முதல் வரும் பிப்ரவரி 11ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

ஐ ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற பல பணிகளுக்கான 979 பணியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை 1056 பணியிடங்களை நிரப்பச் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தற்போது நடத்தப்படவுள்ள தேர்வில் அதிலிருந்து 77 பணியிடங்கள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவில் சர்வீஸ் முதல்நிலைத்தேர்வு நடைபெறும் அதே நாளில் இந்திய வன சேவைக்கான (Indian Forest Service) தேர்வும் நடைபெறும் என்று யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. 150 பணியிடங்களுக்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *