தமிழகத்தில் அமைய வேண்டும் கூட்டணி ஆட்சி..!

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கூட்டம் மாவட்டச் செயலாளர் நியூட்டன்பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, இளைஞரணித் தலைவர் சியாம் ஆகியோர் பேசினர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து சரியான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்காமல் நடைபெறும் ஒரு கட்சி ஆட்சி ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *