திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத அசைவ திருவிழாவில் 10,000க்கும் மேற்பட்டோருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.
மதுரை: தமிழகம் முழுவதும் பல்வேறுமாவட்டங்களில் கோவில் திருவிழாவில்ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத அசைவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.ஒருசில இடங்களில் கறி விருந்து விடிய விடிய நடத்தப்படும் . அதன்படி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத அசைவ திருவிழாவில் 10,000 க்கும் மேற்பட்ட பேருக்குக் கறி விருந்து பரிமாறப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அனுப்பப்பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத அசைவ விருந்துத் திருவிழா நடைபெற்றது.
நேரத்தி கடனாகச் செலுத்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட ஆடுகளைப் பலியிட்டு 3,500 கிலோ அரிசியை கொண்டு சாதத்தை மலைபோல் குவித்து முத்தையா சாமிக்குப் படையல் வைத்துச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
பின்பு 10,000 ஆண்களுக்கு இலை போட்டுக் கறி விருந்து பரிமாறப்பட்டது. இந்த அசைவ விருந்தில் திருமங்கலம், கரடிகல், செக்காஊரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர்.


