மெக்சிகோவில் தட்டம்மை பாதிப்பு தீவிரம்..!

மெக்சிகோவில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதால் பள்ளிகளில் கட்டயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

மெக்சிகோவைச் சுற்றியுள்ள பல்வேறு நகரங்களில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதில், குறிப்பாக ஜாலிஸ்கோ மாநிலத்தில் உள்ள குவாடலஜராவில் இதுவரை ஆயிரத்து 245 பேருக்குத் தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகளில் 30 நாட்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அந்நாட்டு அரசு அறிவித்தது. தொடர்ந்து, மெக்சிகோ முழுவதும் நோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *