தாம்பரம் – திருவனந்தபுரம் அம்ரித் பாரத் ரயில்.!

Advertisements

திருவனந்தபுரம் – தாம்பரம் இடையே பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிமுகப்படுத்தியுள்ள அமிர்த பாரதம் வாராந்திர விரைவு ரயிலின் வழக்கமான ஓட்டம் சனவரி 28ஆம் நாள் முதல் தொடட்ஙகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் – தாம்பரம் இடையே நாகர்கோவில், திருநெல்வேலி வழியாகப் புதிய அமிர்த பாரதம் வாராந்திர விரைவு ரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றுக் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

இருமுனைகளிலும் வாரம் ஒருமுறை இயக்க்கப்படும் இந்த ரயிலின் வழக்கமான ஓட்டம் சனவரி 28ஆம் நாள் முதல் தொடங்கும்.தாம்பரத்தில் இருந்து புதன்கிழமைகளில் மாலை ஐந்து மணிக்குப் புறப்படும் அமிர்த பாரதம் விரைவு ரயில் மறுநாள் காலை எட்டுமணிக்குத் திருவனந்தபுரத்துக்குச் சென்றடையும்.

இதேபோல் திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமைகளில் முற்பகல் 10.40 மணிக்குப் புறப்படும் அமிர்தபாரதம் விரைவு ரயில் அதேநாள் இரவு பதினொன்றே முக்கால் மணிக்குத் தாம்பரம் சென்றடையும்.

இந்த ரயில் தமிழ்நாட்டில் குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, திருவரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறங்கும் வசதி கொண்ட எட்டுப் பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்புப் பொதுப்பெட்டிகள் கொண்ட இந்த விரைவு ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *