K. Annamalai – BJP: தி.மு.க. வின் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான்!

Advertisements

சென்னை: “தி.மு.க., வின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள்” எனத் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முதல்கட்ட தேர்தலில் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதாவது, தமிழகத்தில் 39 தொகுதிகள், ராஜஸ்தானில் 12, உத்தரப்பிரதேசத்தில் 8, மத்திய பிரதேசத்தில் 6, உத்தராகண்ட், அசாம், மற்றும் மகாராஷ்டிராவில் 5, பிஹாரில் 4, மேற்குவங்கத்தில் 3, அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், மேகாலையாவில் 2, சத்தீஸ்கர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அந்தோமான் நிகோபார் தீவுகள், ஜம்மு – காஷ்மீர், லட்சத்தீவுகள் மற்றும் புதுசேரியில் 1 தொகுதிகள் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இந்தநிலையில்

இதுகுறித்து அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, திமுக கொடுத்த 99 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், அதே தேர்தல் வாக்குறுதிகளை, அப்படியே மறுபடியும் வரும் லோக்சபா தேர்தலுக்கும் கொடுத்திருப்பதிலிருந்தே, எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தெரிகிறது.

தி.மு.க., 2021ம் ஆண்டு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், அதுகுறித்து எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு, தற்போது லோக்சபா தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா?.

இது போக, 100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியையும் அப்படியே மீண்டும் இந்தப் லோக்சபா தேர்தலுக்கும் தி.மு.க., கொடுத்திருக்கிறது. மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி என்ற நிலையில், தி.மு.க., வின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும் தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். இனியும் தி.மு.க., வின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை. இவ்வாறு அண்ணாமலை அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *