ஐரோப்பிய நாடுகளிடையே போர் பதற்றம்..!

Advertisements

பெலாரஸ் நாட்டோடு இணைந்து ரஷ்ய ராணுவப் படைகள் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் ஐரோப்பிய நாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உலகத் தலைவர்கள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால், போர் முடிந்தப் பிறகும் உக்ரைனின் பாதுகாப்புக்காகப் பல நாடுகளின் ராணுவப் படைகளை ரஷ்யாவுக்கு அனுப்புவதற்கானத் திட்டங்களை வகுத்து வருவதாக ஐரோப்பிய யூனியன் தலைவர் தெரிவித்தார்.

இந்நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் திரும்பும் பரபரப்பான சூழலில் பெலாரஸ் நாட்டுடன் இணைந்து ரஷ்யா ராணுவ படைகள் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பயிற்சியில், ஒளியை விட வேகமாகச் செல்லக்கூடிய ஏவுகணைகளை வீசி ரஷ்யா சோதனை நடத்தியுள்ளச் சம்பவம் ஐரோப்பிய நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதனால் ரஷ்யாவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *