நல்ல திரைப்படத்திற்கு விருது தேவை கிடையாது : இயக்குநர் மிஷ்கின்..!

Advertisements

ஒரு நல்ல திரைப்படத்திற்கு விருது தேவை கிடையாது என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இயக்குநர் மிஷ்கின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஒரு நல்ல திரைப்படத்திற்கு விருது தேவை கிடையாது என்று விருது என்பது கலைஞர்களுக்கு ஊக்கம் என்று குறிப்பிட்டார்.

தங்கலான், வாழை ஆகிய திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்றெல்லாம் குறைசொல்லக் கூடாது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மிஷ்கின், தன்னுடைய எந்த படத்தையும் விருதுகளுக்காக அனுப்பியதே கிடையாது என்று கூறினார். மக்கள் நமது படத்தை வெற்றிப்படமாக ஆக்கிவிட்டார்கள் என்றால் அதைவிட பெரிய விருது இருக்காது என்று தெரிவித்தார்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *