சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பெல்ஜிய வீரர் ரபேல் கொலிக்னன் உடன் மோதினார். இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன்மூலம், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

