A. C. Shanmugam: குடிசை வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றித் தருவேன்!

Advertisements

உங்கள் பகுதியில் இருக்கக்கூடிய குடிசை வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றித் தருகிறேன் என வேலூர் தொகுதி மக்களுக்கு ஏ சி சண்முகம் வாக்குறுதிஅளித்தார்.

வேலூர்மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகேயுள்ள நரியம்பட்டு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக வேட்பாளர் ஏசி சண்முகத்திற்கு பாஜக பாமக அமமுக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் சார்பில் மலர் தூவியம் ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது., கூட்டத்தில் பேசிய ஏசி சண்முகம் நரியம்பட்டு பகுதி ஒரு நல்ல உற்சாகமான கிராமம்., இந்தத் தொகுதியில் எம்.பியாக ஜெயித்து விட்டுச் சென்றாரே அவர் இந்தப் பகுதிக்கு வரவே இல்லையா இப்பகுதியில் உள்ள குடிசை வீடுகளை ஏன் பிரதமரின் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகளாக மாற்றித் தரவில்லை.

நான் வெற்றி பெற்ற பிறகு இப்பகுதியில் உள்ள குடிசைகள் அனைத்தும் பிரதமர் மோடியின் திட்டத்தின் கீழ் கழிவரையுடன் கூடிய காங்கிரீட் வீடுகளாக 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்., பிரதமரின் திட்டத்தைப் பொதுமக்கள் அடியே கொண்டு சேர்ப்பது எம்பி யின் வேலைஒரு எம்பி வெற்றி பெற்று டெல்லி சென்றால் இப்பகுதிக்கு தோராயமாக ஒரு இரண்டாயிரம் வீடுகள் மட்டுமே வரும் ஆனால் இந்த ஏசி சண்முகம் வெற்றி பெற்று சென்றால் பிரதமரின் அமைச்சரவையில் இடம் பிடித்து இரண்டு லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கான திட்டங்களைக் கொண்டு வருவேன்.,

நரியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒரு அரசு மருத்துவமனையாக நான் வெற்றி பெற்று பொறுப்பேற்ற அடுத்த ஆறு மாதங்களில் கட்டித் தருகிறேன்., இதோ இந்தப் பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் தற்போதுள்ள எம்பி யின் பெயரை எழுதி உள்ளார்கள் ஏன் அந்த எம்பி இந்த வீட்டைக் கான்கிரீட் வீடாக மாற்றித் தரவில்லை அவர்கள் இதைத் தொழிலாகப் பார்க்கிறார்கள் நான் இதைச் சேவையாகப் பார்க்கிறேன்., ஒரு நல்ல எம்பி ஆகச் செயல்பட நான் நினைக்கிறேன்., நான் ஒரு கேரண்டி தருகிறேன் நான் வெற்றி பெற்ற பிறகு வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இருக்கக்கூடிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் எம்பி அலுவலகம் அமைக்கப்படும் ஆம்பூர் பைபாஸ் சாலையில் அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தும் வகையில் ஒரு இலவச திருமண மண்டபம் அமைத்துத் தரப்படும்.,

அவ்வப்போது மருத்துவ முகாம்களை நடத்தி அனைவரையும் 90 வயது வரை நோய் நொடியின்றி வாழ வைக்கிறேன்., என்னை எம்பி ஆக அனுப்புங்கள் நான் மந்திரியாக வந்து உங்களுக்குச் சேவை செய்கிறேன் என்று வாக்குறுதிகளைக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *