டொனால்ட் டிரம்ப் ஆசிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம்.!

Advertisements

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆசிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 5 நாட்கள் பயணமாக ஆசிய நாடுகளுக்கு வருகை தந்துள்ளார். மலேசியாவில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ள ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அதிபர் டிரம்ப் தலைநகர் கோலாலம்பூருக்கு வந்தடைந்தார். தொடர்ந்து அவருக்கு மலேசியா அரசு தரப்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஆசியன் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதற்கு முன்னதாக, கம்போடியா-தாய்லாந்து இடையேயான எல்லை பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமைதி ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட உள்ளார்.

பின்னர், அங்கிருந்து ஜப்பானுக்கு சென்று பிரதமர் சனே தகச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.தொடர்ந்து தென்கொரியாவில் நடைபெற உள்ள ஆசியா பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்நிலையில் வடகொரிய அதிபருடனான சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விக்கு அதிபர் டிரம்ப் பேசியபோது, கிம் ஜாங் அன் தனக்கு நல்ல நண்பர் என்றும் அவரை சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பயணத் திட்டத்தில் கிம் ஜாங் அன்னுடனான எந்த சந்திப்புக்கும் திட்டமிடப்படவில்லை என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *