Arvind Kejriwal:டெல்லியின் புதிய முதல்வர் அதிஷி!

Advertisements

டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி (43) பெயரை அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரைத்தார்.
AAP எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அக்கட்சியின் புதிய சட்டமன்றக்குழு தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்திற்குள் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்காகத் துணைநிலை ஆளுநரிடம் நேரம் கேட்டிருந்தார். அவர் இன்று மாலை கெஜ்ரிவாலுக்கு நேரம் ஒதுக்கியுள்ளார்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலைக் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி சட்டமன்ற கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

ஆலோசனை முடிவில் கெஜ்ரிவால், 14 துறைகளைக் கையில் வைத்திருக்கும் அதிஷி பெயரைப் பரிந்துரை செய்தார். அவர் பரிந்துரையை மற்ற எம்.எல்.ஏ.-க்கள் ஏற்றுக் கொண்டனர். இதனால் அதிஷி அடுத்த முதல்வராகப் பதவி ஏற்க உள்ளதாகக் கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *