கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.!

Advertisements

ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இந்திய – ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தது. 46 புள்ளி 4 ஓவர்களில் 236 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிக அளவாக மேத்யூ ரென்சா 56 ரன்கள் எடுத்தார். இதையடுத்து விளையாடிய இந்திய அணி 38 புள்ளி மூன்று ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கான 237 ரன்களை எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 121 ரன்களும், விராட் கோலி 74 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே 2 போட்டிகளில் வென்று கைப்பற்றியுள்ளது. இந்திய அணிக்கு இது ஆறுதல் வெற்றியாகும். ஆட்டநாயகன், தொடர்நாயகன் விருதுகளை இந்தியாவின் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *