அண்ணாமலை புதிய கட்சி கொடி அறிமுகம்: தமிழக அரசியலில் பரபரப்பு..!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனி கட்சி தொடங்குவார் என பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது நெல்லையில் அண்ணாமலை சார்பாக புதிய அமைப்பும் கொடியும் அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கர்நாடக மாநிலத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி புகழ் பெற்ற அண்ணாமலை தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவராக பொறுப்பேற்றார்.

அண்ணாமலையின் தமிழக அரசியல் வருகை மிகப்பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தியது என்று சொல்லலாம் அந்த அளவுக்கு பாஜக சார்பில் மிக தீவிரமாக பணியாற்ற தொடங்கினார்.

திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு எதிராக போர் கொடி பிடித்த அவர் திமுக அமைச்சரவையில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி ஆளுநர் மாளிகை வரை சென்று புகார் மனுக்கள் அளித்தார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்தார்.

தனது பேச்சுத் திறமையால் பத்திரிகையாளர்களை வசப்படுத்தி தினந்தோறும் அண்ணாமலையின் பேச்சுக்கள் பத்திரிகைகளில் உலா வர ஆரம்பித்தன. தனக்கு துணையாக வேறு எந்த அரசியல் தலைவர்களையும் எதிர்பார்க்காமல் தன்னந்தனி நபராக நின்று பாரதிய ஜனதா கட்சியை மிக பெரிய அளவில் பேசும் பொருள் ஆக்கினார்.

இடைப்பட்ட சமயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவர் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியதோடு அதிமுக பாரதி ஜனதா கட்சி கூட்டணியும் முறிவடைந்தது. இருந்தபோதிலும் பாரதிய ஜனதா கட்சி தலைவராக அண்ணாமலை தீவிர பணிகளை தொடர்ந்து செய்து வந்தார்.

இந்த நிலையில் அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சேரும் முடிவை டெல்லி மேலிடம் எடுத்த சமயத்தில் தமிழக பாஜக தலைவராக நெல்லையைச் சேர்ந்த நைனார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அண்ணாமலைக்கு டெல்லி மேல் இடத்தில் மிகப்பெரிய பதவி தரப்படும் என்ற பேச்சு எழுந்தது .

ஆனால் காலங்கள் பல கடந்தும் அண்ணாமலைக்கு எந்தவித பதவி வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை இதே போல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த சரத்குமார் விளவங்கோடு விஜயதாரணி ஆகியோருக்கும் பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நைனார் நாகேந்திரனுக்கும் அண்ணாமலைக்கும் இடையே திரை மறைவில் அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வந்தன.

தமிழக பாஜக தொடர்பாக நயினார் நாகேந்திரன் டெல்லி மேல் இடத்தை தொடர்பு கொண்டு பேசி வந்தார் அவ்வப்போது டெல்லிக்கும் சென்று வந்தார். ஆனால் அண்ணாமலை சார்பாக செய்யப்படும் சிபாரிசுகளை டெல்லி மேலிடம் புறக்கணித்து வந்தது அண்ணாமலையும்ம் டெல்லி செல்வதை தவிர்த்து வந்தார்.

குறிப்பாக தமிழக பாஜகவில் சமீபத்தில் மாற்றங்கள் நடைபெற்றன புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டார்கள் . இதில் நயினார் நாகேந்திரன் சிபாரிசுகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன.  அண்ணாமலை அனுப்பிய சிபாரிசு பட்டியல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் அரசியலை விட்டு ஒதுங்கி விடலாமா என அண்ணாமலை யோசனை செய்து வந்தார் இருந்தபோதிலும் பாரதிய ஜனதா கட்சியில் தொடர்ந்து நீடிப்பது என இறுதி முடிவு எடுத்தார்

இதற்கிடையே சென்னையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய செயற்குழு கூட்டத்தில் கூட அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை தனக்கு காய்ச்சல் இருப்பதாக கூறி வீட்டில் படுத்து கொண்டார்.  இதன் பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் அவரது வீட்டுக்கே சென்று சமாதானப்படுத்தி மதியத்திற்கு பிறகு அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி பாஜக மேல் இடத்தை பொருத்தவரையில் அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவு எடுத்திருப்பதால் அண்ணாமலை அதற்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று கருதி அவரை ஒதுக்கி வைப்பதாக தெரிகிறது. முன்னதாக அண்ணாமலை லண்டனில் அரசியல் படிப்பு படிப்பதற்காக சென்றதன் பின்னணியில் கூட அரசியல் இருப்பதாக பேசப்படுகிறது .அவரை ஓரம் கட்டுவதற்காக தான் டெல்லி பாஜக மேலிடம் அண்ணாமலையயை லண்டனுக்கு அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே டெல்லியை தலைமை இடமாக கொண்டு அண்ணாமலையின் அன்பு கூட்டம் என்ற அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டது கேரளாவை சேர்ந்த சஜ்ஜல் என்பவர் இந்த அமைப்பை வழி நடத்தி செல்கிறார். இந்த அமைப்பு டெல்லியில் இருந்த படி தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர்களை சேர்த்து வருகிறது தற்பொழுது வரை இந்த அண்ணாமலை அன்பு கூட்டம் அமைப்பில் 75 ஆயிரம் பேருக்கும் மேலாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் .

இதற்கிடையே அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவாரா என்று அவரிடமே கேள்வி கேட்கப்பட்டது அப்பொழுது அவர் சிரித்துக் கொண்டே நான் கட்சி ஆரம்பித்தால் பத்திரிகையாளர்களிடம் சொல்லிவிட்டு தான் ஆரம்பிப்பேன் பத்திரிக்கையாளர்கள் தான் வந்து விளக்கு ஏற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இருந்த போதிலும் அண்ணாமலை தனக்கென தனி ஆதரவாளர்களை திரை மறைவில் சேர்த்து வருகிறார். அதற்கிடையே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகபொது செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது தமிழ்நாட்டில் மூன்றாவது மிகப்பெரிய அரசியல் கூட்டணி ஒன்று ஏற்பட போகிறது என்று சூசகமாக தெரிவித்தார்.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைவதுடன் அண்ணாமலை புதிதாக தொடங்கும் கட்சியும் இணையலாம் என்பதுதான் டிடிவி தினகரனின் பேச்சாக அமைந்திருக்கிறது என பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *