அன்புமணியை ஒழித்துக் கட்ட புதிய தலைவர் தயார்? ராமதாஸ் தடாலடி..!

Advertisements
கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசுக்கும் செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையே மிகப்பெரிய மோதல் நடைபெற்று வருகிறது . கொஞ்சம் கொஞ்சமாக நடைபெற்று வந்த மோதல் இப்பொழுது உச்ச நிலைக்கு வெடித்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு உயிர் உள்ளவரை நான் தான் தலைவர் என்கிறார் ராமதாஸ் இல்லை நான்தான் தலைவர் பொதுக்குழு என்னைத்தான் தலைவராக தேர்ந்தெடுத்து இருக்கிறது என்கிறார் அன்புமணி . இருவருக்கும் இடையே நடைபெற்று வரும் யுத்தம் தினசரியும் ஒரு செய்தியாக வெளிவந்த வண்ணம் இருக்கிறது
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிய செயல் தலைவரை மருத்துவர் ராமதாஸ் தேர்ந்தெடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது . மருத்துவர் ராமதாசை பொருத்தவரையில் வயது மூப்பு காரணமாக கட்சியை வழிநடத்தி செல்வதற்கு இன்னொருவர் தேவைப்படுகிறார்.
அந்த வகையில் தனது குடும்பத்து பெண்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று பேசி வந்த மருத்துவர் ராமதாஸ் இப்பொழுது தமது மகள் ஸ்ரீகாந்தியை புதிய செயல் தலைவராக வெகு விரைவிலேயே அறிவிக்க காத்திருக்கிறார் . இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட போது போகப்போக தெரியும் என்று பாட்டு பாடினார் அவர் ஆனால் காலம் கடத்தாமல் இன்னும் சில மாதங்களிலேயே ஸ்ரீ காந்தி தான் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவர் என அறிவிக்க காத்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்
அன்புமணியும் ஸ்ரீ காந்தியும்  உடன் பிறந்தவர்கள் என்றாலும் தனது மகன் முகுந்தனை கட்சியில் நுழைய விடாமல் தடுத்ததற்காக சகோதரர் அன்புமணி மீது சகோதரி ஸ்ரீ காந்தி கோபத்தில் இருக்கிறார் . எனவே தனக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு வர அவர் தயாராக இருக்கிறார்
இப்பொழுது பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முதல்   தொண்டர்கள் வரை ஸ்ரீ காந்தியை  பார்த்தால் மிகப்பெரிய கும்பிடு போட ஆரம்பித்து இருக்கிறார்கள் . இதன்மூலம் மருமகள் சௌமியாவுக்கும் மகன் அன்புமணிக்கும் மிகப்பெரிய செக் வைக்க ராமதாஸ் திட்டம் தீட்டி உள்ளது தெரியவந்து வருகிறது .
இதற்கிடையே மருத்துவர் ராமதாஸ் வீட்டில் இல்லாத போது அன்புமணி தைலாபுரம் வீட்டுக்குச் சென்று தனது தாயாரை சந்தித்து பேசினார் அப்போது தயவு செய்து ஸ்ரீகாந்தியை  அரசியலுக்கு கொண்டு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக தெரிகிறது இது தொடர்பாக பேசுவதற்காக தான் அன்புமணி தைலாபுரம் வீடு சென்றதாகவும் இப்போது தகவல் வெளியாகி உள்ளது .
இதற்கிடையே பாமக உரிமை தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் தேர்தல் கமிஷனை அணுகியிருக்கிறார் என்பதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மருத்துவர் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே உள்ள மோதல் குடும்ப சண்டை அல்ல பண விவகாரம் தொடர்பாக ஏதோ பிரச்சனை நடக்கிறது என்று வெளிவட்டாரங்களில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *