
மராட்டியத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும். சுகாதார துறை தெரிவித்துள்ளது
நாட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று உறுதியானது. தொடர்ந்து நாடு முழுவதும் பரவல் அதிகரித்தது. பின்பு, கொரோனா தடுப்பூசி போடப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், நாட்டில் மீண்டும் புதிதாக கொரோனா தொற்று பரவி வருகிறது. எனினும், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், மராட்டியத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 4 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் எனவும், இதுதவிர தானேவில் ஒருவரும், புனேவில் ஒருவரும், புனே மாநகராட்சி பகுதியில் 7-பேரும், நாக்பூரில் ஒருவரும் என பதிவாகியுள்ளன. இதனால், இந்த ஆண்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2-ஆயிரத்து 547-ஆக அதிகரித்து உள்ளது என சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதேபோன்று, நாக்பூரை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார் என உறுதியாகியுள்ளது.
