Iran vs Pakistan: பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்!

ஈரானின் சப்பார் பகுதியை நோக்கித் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது எனப் பாகிஸ்தான் டெய்லி பத்திரிகை தெரிவிக்கின்றது.

தெஹ்ரான்: பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட சன்னி பிரிவைச் சேர்ந்த ஜெய்ஷ் அல்-அடில் என்ற பயங்கரவாத அமைப்பை இலக்காகக் கொண்டு ஈரான் அரசு, ராக்கெட் மற்றும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் பலூசிஸ்தானில் நடந்த இந்தத் தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர் என இஸ்லாமாபாத் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சூழலில், ஈரானுக்கு எதிராகப் பாகிஸ்தான் இன்று தாக்குதலில் ஈடுபட்டது. இதன்படி, ஈரானின் சப்பார் பகுதியை நோக்கித் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது எனப் பாகிஸ்தான் டெய்லி பத்திரிகை தெரிவிக்கின்றது.

இதில், ஈரான் நாட்டு பகுதியில் அமைந்த பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்று பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த இந்தத் தாக்குதல் எதிரொலியாக ஈரானுக்கான தன்னுடைய தூதரைப் பாகிஸ்தான் திரும்ப அழைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தது. ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்கு திரும்ப இருந்த ஈரான் தூதருக்கான அனுமதியையும் மறுத்தது. இது சட்டவிரோத தாக்குதல் என்றும் கண்டனம் தெரிவித்தது.

ஈரான், தன்னுடைய தற்காப்புக்காக இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளது என்பது புரிந்து கொள்ள முடிகிறது என்று மத்திய அரசு தெரிவித்தது. எனினும், பாகிஸ்தான் மண்ணில் உள்ள ஈரான் பயங்கரவாதிகளையே நாங்கள் தாக்கினோம் என்று ஈரான் பதிலளித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *