Pick-Up Truck Accident: பயங்கர விபத்தில் 14 பேர் பலியான சோகம்!

மத்திய பிரதேச மாநிலம் திண்டோரில் பெரிய அளவிலான விபத்து ஒன்று ஏற்பட்டதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

திண்டோரியில் உள்ள பர்ஜார் காட் என்ற இடத்தில் பிக்கப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஷாபுரா சமூக சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரேக் பழுதானதால் விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நிவாரணம் அறிவிப்பு:
திண்டோரி மாவட்டத்தில் வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதனுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 4லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *