Rajasthan:கார் கவிழ்ந்து விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

Advertisements

டயர் வெடித்து கார் சாலையில் கவிழ்ந்த சம்பவம்பற்றிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்தக் கார் சிரோஹி மாவட்டத்தில் உள்ள பிர்வார்-பிண்ட்வாரா நெடுஞ்சாலையில் சென்றபோது டயர் வெடித்ததில் கார் சாலையில் கவிழ்ந்தது.

இந்தக் கோர விபத்தில் காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம்பற்றிப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்தக் கார் அதிவேகத்தில் சென்றபோது டயர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம்பற்றிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *