ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்ட ரஷிய நடிகை!

Advertisements

தாய்லாந்தில் உள்ள கோ சாமுய் தீவுக்குச் சென்ற ரஷிய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா ராட்சச அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

ரஷிய நடிகை ராட்சச அலையில் சிக்கிய அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரஷிய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா தனது காதலருடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள கோ சாமுய் தீவின் கடற்கரையில் உள்ள பாறையின் மீது அமர்ந்து அவர் தியானம் செய்துள்ளார்.

அப்போது திடீரென வந்த ராட்சச அலை அவரைக் கடலுக்குள் இழுத்து சென்றது. அப்போது அருகில் இருந்த நபர் நடிகையைக் காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் அவரால் காப்பாற்ற முடியவில்லை. பின்னர் சில கி.மீ. தொலைவில் ரஷிய நடிகை சடலமாக மீட்கப்பட்டார்.

அந்தத் தீவில் கனமழை பெய்து வருவதால், கடற்கரைக்கு அருகில் யாரும் செல்ல வேண்டாமென உள்ளூர் அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளை எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *