அண்ணாமலை ஆதரவாளர் கூட்டம் : 2-ஆக உடையும் பாஜக.!

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்கள் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் பாஜக குறித்தும் அண்ணாமலை குறித்தும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.
கர்நாடக காவல்துறையில் உயர் அதிகாரி ஆக இருந்த அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார் இதன் பிறகு தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது . திமுக , அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளுக்கும் போட்டியாக பாரதிய ஜனதா கட்சி மக்கள் மத்தியில் பிரபலமானது. அதேபோல் வாக்கு வங்கியும் குறிப்பிட்ட சதவீதம் உயர்ந்தது .
இந்த நிலையில் , அண்ணாமலை தன்னிச்சையாக செயல்படுகிறார் தனக்கென கூட்டம் சேர்க்கிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அண்ணாமலை பதவியில் இருந்து விலக்கப்பட்டார் . அரசியல் குறித்து மேற்படிப்பு படிப்பதற்காக அவர் லண்டன் அனுப்பப்பட்டார். அவருக்கு பதிலாக திருநெல்வேலியை சேர்ந்த நைனார் நாகேந்திரன் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார் .
இதன்பிறகு அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் ஏதாவது முக்கிய பதவி வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் இன்று வரை எந்தவிதமான பதவியும் வழங்கப்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில் , தமிழ்நாட்டில் அண்ணாமலைக்கென தனியாக மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது . இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் பெரும்பாலான பேர் அண்ணாமலைக்கு ஆதரவாளராக இருக்கிறார்கள் .
இந்த நிலையில் , கட்சி செயல்பாடுகள் குறித்து அண்ணாமலை பின் வாங்க ஆரம்பித்தார் . தனக்கு தரப்படும் பணிகள் அனைத்தையும் நிராகரிக்க தொடங்கினார் . டெல்லி உள்பட ஆலோசனைக் கூட்டங்கள் எது நடைபெற்றாலும் அதில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார்.  இதன் மூலம் தனது எதிர்ப்புகளை டெல்லி மேல் இடத்துக்கு அவர் தெரிவித்து வந்த நிலையில் டெல்லி பாஜக மேல் இடம் அவரை அழைத்து சமாதானம் செய்தது.
தற்பொழுது,  அண்ணாமலை நற்பணி இயக்கம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே புதிய அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. திருநெல்வேலியைச் சேர்ந்த வேல் கண்ணன் என்பவர் இதனை வழிநடத்தி செல்கிறார். தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் 50 அரசியல் மாவட்டங்களில் இன்று இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது.இதேபோல் புதுடெல்லியிலும் மிகப்பெரிய அளவில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்கள் .
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சஜ்ஜல் என்பவர் இந்த அமைப்பை நடத்தி வருகிறார் . இந்த நிலையில் திருநெல்வேலியில் அண்ணாமலை நற்பணி மன்ற ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் 500 பேருக்கும் மேலாக பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டார்கள் .
இந்த கூட்டத்தில் , சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.  அதன்படி அண்ணாமலை தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் .
இதற்காக நாம் அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும். அண்ணாமலை நாங்குநேரியில் போட்டியிடுவதற்கு அனைவரும் விருப்ப மனு தாக்கல் செய்ய வேண்டும் . அவர் எங்கு சென்று போட்டியிட்டாலும் அந்த தொகுதியில் நாம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்
நாம் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியில் தான் இருக்கிறோம் . இருந்த போதிலும் அண்ணாமலை தான் நமக்கு தலைவராக அறியப்படுகிறார் .
பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்காக உழைத்த அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் பதவி வழங்காமல் இருப்பது வேதனைக்குரியது .
விரைவிலேயே அவருக்கு டெல்லி மேலிடம் ஒரு நல்ல பதிவியை வழங்கி கௌரவிக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நாம் அண்ணாமலையின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன .
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் நைனார் நாகேந்திரன் சொந்த ஊரான திருநெல்வேலியில் இந்த கூட்டம் நடைபெற்றது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது . இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தற்பொழுது இரண்டாக உடையும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள் . காரணம்,  அண்ணாமலைக்கென மிகப் பெரிய அளவில் தொண்டர்கள் கூட்டம் இருப்பதால் இவர்கள் ஓரணிகள் திறலும் பொழுது தமிழக பாஜக இரண்டாக பிரிவதை தடுக்க முடியாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் .
தற்பொழுது திருநெல்வேலி நடைபெற்ற அண்ணாமலை ஆதரவாளர் கூட்டத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் ஏராளமான தொண்டர்கள் அவருக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.  எனவே அண்ணாமலை ஏதாவது அதிரடியாக முடிவு எடுத்தால் அவருக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய இயக்கமே திரளும் என்பது தற்போதைய பரபரப்பு செய்தியாக பார்க்கப்படுகிறது. .
ஏற்கனவே அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியை விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணையலாம் என பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது குறித்து அண்ணாமலை எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *