Wikipedia: டிக்கிபீடியா என பெயரை மாற்றிக் கொண்டால் $1 பில்லியன்!

Advertisements

விக்கிபீடியா  தனது பெயரை மாற்றி டிக்கிபீடியா என பெயரை மாற்றிக் கொண்டால் $1 பில்லியன் விக்கிபேடியாவுக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

விக்கிபேடியா எனும் இலவச ஆன்லைன் கலைக்களஞ்சியம் மிகவும் பயனுள்ளது அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இதிலிருந்து தகவல்கள் மற்றும் படங்கள், இடங்கள் முதலிய தகவல்களை  தரவு செய்து  கொள்ளலாம். இதில் தரவுகளைப் பெற்றால் பதிப்புரிமை பிரச்சனை இல்லை. இலவசமாக தகவல்களை திரட்ட முடியும்.

இந் நிலையில் `விக்கிபீடியா’ என்ற பெயரை ‘டிக்கிபீடியா’ என்று மாற்றி குறைந்தபட்சம் ஒரு வருடமாவது அப்பெயரிலேயே இருக்க சம்மதித்தால்  விக்கிப்பீடியாவிற்கு $1 பில்லியன் நன்கொடை அளிப்பதாக எலன் மஸ்க் நகைச்சுவையாக  கூறியுள்ளார்.

விக்கிபீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் விமர்சிப்பவர்களை தணிக்கை செய்ததற்காக மஸ்க்கை விமர்சித்ததை அடுத்து  இது போன்ற கிண்டலான அறிக்கைகள் வலம்   வந்துள்ளது.

ட்விட்டரில் விளையாட்டுத்தனமாக அறிக்கை விடுத்து வெளியிட்டுள்ள சலுகை மற்றும் அடுத்தடுத்த  உரையாடல்  பொதுமக்களின் கவனத்தை வெகுவாக  ஈர்த்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *