Puffy Eyes: உங்கள் கண்கள் அப்பளம் போல வீங்குதா?அப்போ உங்களுக்குத் தான் இந்த டிப்ஸ்…….

Advertisements

Puffy Eyes Remedy :

கண்களின் வீக்கத்தை சரி செய்ய வீட்டு வைத்திய முறைகள் உள்ளன. இதைச் செய்வதால் கண்கள் புத்துணர்ச்சியோடு பொலிவுடனும் காணப்படும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால் ஒருவருடைய அழகு அவரின் கண்களில் தான் இருக்கிறது. நம்முடைய கண்கள் தான் நம் உடலுக்கு விளக்கு. சந்தோஷமாக உள்ள ஒருவரின் கண்களை நீங்கள் பார்த்தால் அதன் பொலிவு தெளிவாகத் தெரியும். அதுவே ஒருவர் சோகமாக இருந்தால் அவர் கண்கள் பொலிவிழந்து காணப்படும். ஒருவருடைய வாழ்க்கைமுறை அவரின் கண்களில் வெளிப்படும்.
நன்றாகத் தூங்கி, நல்ல உணவைச் சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்கும் நபரின் கண்கள் காண்போரை கவரும்.தனித்துவமாக இருக்கும்.நமது உணர்வுகளை உண்மையாக வெளிப்படுத்துவது கண்கள் தான். இன்றைய காலகட்டத்தில் ஓயாத வேலை, தீராத மன அழுத்தம் என மக்களின் கண்கள் பிரகாசமின்றி காணப்படுகின்றன.சரியாகத் தூங்காமல் பலருக்கும் கண்களின் கீழே கருவளையம் காணப்படும். சிலருக்கு கண்ணின் கீழ் பகுதியில் உள்ள இமையின் பைகளில் வீக்கம் கூட வரும்.கண்களுக்குப் போதுமான ஓய்வு கொடுக்காததும், ஒரு நபர் சரியாகத் தூங்காமல், சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் கண் பிரச்சனைகள் வரத் தொடங்குகிறது. சூரிய ஒளியை அதிகமாகப் பார்ப்பது, தோலில் ஏற்படும் அலர்ஜி, கண்களில் வெண்படலம் ஆகிய பிரச்சனைகளும் கண்களில் வீக்கத்துக்கு காரணமாகும்.

இதற்குக் காரணம்.
கண்களின் ஆரோக்கியம் ஒவ்வொரு வயதினருக்கும் வேறுபடும். ஆனால் கண் பாதிப்புகள் அனைத்து வயதினருக்கும் பாரபட்சமின்றி வரும். கண்களின் பாதுகாப்பு அரணாக இருப்பது இமைகள். இதில் கீழ் இமைக்குக் கீழே காணப்படும் பை மென்மையான திசுக்களைக் கொண்டுள்ளது. இந்தத் திசுகளில் உண்டாகும் வீக்கமே வீங்கிய கண்களுக்குக் காரணம். இந்த மென்மையான பைகள் பாதிப்படைந்தால் கண்களில் வீக்கம், வறட்சி, கண்களில்  நீர் சூழ்ந்திருப்பது மாதிரி இருக்கும். இது ஆரோக்கியமான மாற்றமல்ல.

வீட்டுவைத்தியங்கலாய் வைத்து எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம்:

வீங்கிய கண்களுக்கு மற்றொரு காரணம், நீங்கள் மாதவிடாய் சுழற்சியில் இருக்கிறீர்கள் அல்லது உங்கள் சருமத்திற்கு வயதாகிறது. முதுமை என்பது இயற்கையாகவே உங்கள் சருமத்தை கண்களுக்குக் கீழே சிறிது தொய்வு மற்றும் வீக்கமடையச் செய்யும் ஒரு செயல்முறையாகும். உங்கள் கண்கள் வீங்குவதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், 15 நிமிடங்களில் வீக்கத்தைக் குறைக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன.

கண் வீக்கத்தை குறைக்க …

கண்களில் வீக்கம் ஏற்படாமல் தடுக்க தினமும் நன்றாகத் தூங்க வேண்டும். 7 முதல் 8 மணி நேர உறக்கம் கட்டாயம்.  ஆரோக்கியமான உணவுகள் உடலுக்கு மட்டுமல்ல கண்களுக்கும் நல்லது. இது தவிர, தோல் பராமரிப்பு பயன்படுத்தும் சீரம், கிரீம்கள், கூலிங் கிளாஸ் ஆகியவற்றை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். கண்கள் அதிக வெப்பத்தை உணரக் கூடாது. நீங்கள் சரியாகத் தூங்காவிட்டாலும், உடலில் நிரீழப்பு ஏற்பட்டாலும் உடலின் வெப்பம் அதிகரிக்கும். இதனால், கண்களில் எரிச்சல், வீக்கம் வரலாம். இதனை, வீட்டில் உள்ள பொருள்களால் இயற்கை முறையில் பயன்படுத்தலாம்

வெள்ளரி துண்டுகள்:

உங்கள் கண்களின் மேலே வெள்ளரிக்காய்த் துண்டுகளை வைக்க வேண்டும். இது உங்கள் கண்களைத் தளர்த்தவும், கருவளையங்களைக் குறைக்கவும் மற்றும் கண்களுக்குக் கீழே உள்ள வீக்கத்தைக் குறைக்கவும் செய்யப்படுகிறது. வெள்ளரி, நீரேற்றம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. பல ஆய்வுகள் இது சேதமடைந்த சருமத்தை குணப்படுத்தும் மற்றும் அதன் நீர் உள்ளடக்கம் மற்றும் வைட்டமின் சி நிறைந்த வீக்கத்தைக் குறைக்கும் என்று காட்டுகின்றன. எனவே, உங்கள் கண்களில் 2 துண்டுகள் குளிர்ந்த வெள்ளரிக்காயை வைத்து, அவற்றை 10-15 நிமிடங்கள் விட்டுவிட்டு, வீங்கிய கண்களுக்குக் குட்பை சொல்லுங்கள்.

இறுதிகுறிப்பு:

இவை தவிர, முதலில் கண்கள் வீங்காமல் இருக்க நீங்கள் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகள் குறைந்தது 6-8 மணிநேரம் தூங்குதல், இரவில் உப்பு உணவுகளை உண்ணக் கூடாது. கண் மற்றும் முகப் பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொள்ளுங்கள். பெண்களே, இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சித்துப் பாருங்கள், தினமும் காலையில் நல்ல தெளிவான கண்களை நீங்கள் பெறலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *