
பதக்கப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்தியா!
ஆசியன் பாரா விளையாட்டுப் போட்டிகள் 2023-இல் இதுவரை இந்தியா 4 தங்கம் 5 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் வென்று பதக்கப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 12 தங்கம் வென்று சீனா முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது.
பாரா ஆசிய விளையாட்டுகள்:
ஆசிய விளையாட்டைத் தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கான, ஆசிய பாரா விளையாட்டுகள் சீனாவில் தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. ஹாங்சோவ் நகரில் வரும் 28ம் தேதிவரை இந்த விளையாட்டு நடைபெற உள்ளது. நான்காவது முறையாக நடைபெறும் இதில், 22 விளையாட்டுகளில் 24 பிரிவுகளில் 566 தங்கப் பதக்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இதற்காக இந்தியா சார்பில் 196 ஆண்கள் மற்றும் 113 பெண்கள் என 309 தடகள வீரர், விராங்கனைகள் சீனா சென்றுள்ளனர். இவர்கள் 17 பிரிவுகளில் களமிறங்க உள்ளனர். கேனோயிங், பிளைண்ட் கால்பந்து, புல்வெளி கிண்ணங்கள், ரோயிங் மற்றும் டேக்வாண்டோ ஆகியவை முதன்முறையாக நடப்பாண்டில் ஆசிய பாரா விளையாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தங்கம் வென்ற இந்தியர்கள்:
F51 கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் பிரணவ் சூர்மா தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய பாரா விளையாட்டில் F51 கிளப் எறிதல் போட்டியில் 3 பதக்கங்களையும் கைப்பற்றியது இந்தியா.
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 மற்றும் ஆடவர் கிளப் த்ரோ எஃப் 51 ஆகிய இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தி, ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பதக்கங்களை வென்றது.
தொடர்ந்து, மோனு கங்காஸ் ஆடவருக்கான ஹாட் எட் எஃப் 11 போட்டியில் 12.33 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்கப் பட்டியலில் இடம் பிடித்தார்.
பெண்களுக்கான கேனோ விஎல்2 போட்டியில் பிராச்சி யாதவ் 1;03.147 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.

துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப்பதக்கம்:
இந்தியாவை சேர்ந்த 16 வயதே ஆன ருத்ரான்ஸ் 50 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம், 3 தங்கள், 5 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என இந்தியா மொத்தம் 10 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்திய அணிக்கு மேலும் ஒரு தங்கம்.
மகளிர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேக்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.


