Ipl 2025 : மெட்ரோ ரெயில்களில் இலவசமாக பயணிக்கலாம் !

ஐ.பி.எல் போட்டியை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மெட்ரோ ரெயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டியை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மெட்ரோ ரெயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும், ஐ.பி.எல். போட்டிக்கான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தனித்துவமான கியூ ஆர் குறியீட்டை, தானியங்கி நுழைவு எந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம் என்றும், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ ரெயில் நள்ளிரவு 1 மணி அல்லது போட்டி முடிந்து 90 நிமிடத்தில் புறப்படும் என்றும், அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *