நட்புறவின் புதிய அத்தியாயம்..!

ஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற சானே தகைச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற சானே தகைச்சிக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில், தேர்தலில் நீங்கள் பெற்ற மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள் சானே தகைச்சி என்று தெரிவித்தார்.

இந்தியா-ஜப்பான் இடையே உலகளாவிய உறவுகள், சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது என்று கூறினார். உங்கள் தலைமையிலான நட்புறவை மேலும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என தான் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *