
அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கும் சூழலில், பிரதமர் மோடிக்கும், மறைந்த விஜயகாந்திற்கும் இடையே நல்ல நட்புறவு இருந்ததாகவும், அவர் சகோதரர் போன்றவர் எனவும் பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பது தமிழக அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மோடி ஸ்டோரி என்ற சமூக வலைதள சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் விஜயகாந்த், பிரதமர் மோடி – விஜயகாந்த் இடையேயான நினைவலைகளை பகிர்ந்துகொண்டார்.
பிரதமர் மோடிக்கும், விஜயகாந்திற்கும் இடையே இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று என்றும். தமிழகத்தின் சிங்கம் என விஜயகாந்தை பிரதமர் மோடி அன்போடு அழைப்பார் எனவும், அவர் உடல்நலக் குறைவால் இருந்தபோது கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2024 மக்களவைத் தேர்தலின் போது, அதிமுக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகித்தது. இந்நிலையில், விஜயகாந்த் மற்றும் பிரதமருக்கு இடையேயான உறவு குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசிய காணொளியை பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறிப்பிடத்தக்க தனது அன்பு நண்பர் என பதிவிட்டுள்ள மோடி, தானும் அவரும் பல ஆண்டுகள் ஒன்றாக பணி செய்ததாக குறிப்பிட்டுள்ளார். விஜயகாந்தின் சேவையை எதிர்வரும் தலைமுறை மறவாது எனவும் மோடி கூறியுள்ளார்.
