6வது தோல்வியின் விளிம்பிலிருந்த CSK…ஒரே ஆளாக வென்ற 43 வயது தோனி!

Advertisements

உலகின் பல நாடுகளில் 2025 ஐபில் போட்டி நடைபெற்று வருகிறது. தொடந்து 5 போட்டியில் தோல்வியுற்ற நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஃபினிசராக சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐபிஎல் கிரிக்கெட்டிலும் எம்எஸ் தோனி ஏற்படுத்தி வைத்திருக்கும் லெகஸியானது, வேறு எந்த உலக வீரரும் நெருங்க முடியாத ஒன்றாக இருந்துவருகிறது. அதிலும் 19வது மற்றும் 20வது ஓவரில் 43 வயதாகும் தோனி மட்டுமே அதிக சிக்சர்கள் அடித்த வீரராக ஐபிஎல் வரலாற்றில் வலம்வருகிறார்.டெத் ஓவரில் அதிகப்படியாக 183 சிக்சர்களை அடித்திருக்கும் தோனிக்கு அடுத்த இடத்தில் 127 சிக்சர்களுடன் அதிரடி வீரர் கிரன் பொல்லார்டு நீடிக்கிறார்.

இப்படியான ஒரு மரபை கொண்டிருப்பதால் தான், சிஎஸ்கே அணியில் வேறுஎந்த பேட்ஸ்மேனும் அடிக்காத போதும் கூட, தோனி ஏன் இண்டண்ட் காமிக்கவில்லை என்ற ஆதங்கத்தை சிஎஸ்கே ரசிகர்கள் வெளிப்படுத்தினர். ஆனால் எப்படி சிஎஸ்கே அணியின் சிறந்த பந்துவீச்சானது, அவர்களின் மோசமான பேட்டிங்கால் மறைக்கப்பட்டதோ, அப்படித்தான் விக்கெட் கீப்பிங், பேட்டிங் என அவருடைய வேலையை சரியாக செய்த ஒரே வீரராக இருந்த தோனியும் மறைக்கப்பட்டார். அதை உணராத சில ரசிகர்கள் தோனியை கடுமையான சொற்களால் வசைபாடினர். சிஎஸ்கே அணியின் தொடர்ச்சியான 5 தோல்விகளும் அதற்கு பெரிய காரணமாக அமைந்தது.

7வது வீரராக களத்திற்கு வந்த 43 வயதான தோனி, வந்ததிலிருந்தே சிக்சர் பவுண்டரி என நாலாபுறமும் சிதறடித்து 7 பந்தில் 19 ரன்கள் என துவம்சம் செய்ய, ஆட்டம் சிஎஸ்கேவின் பக்கம் திரும்பியது. அடுத்தடுத்த ஓவரில் 13 ரன்கள், 12 ரன்கள் என விரட்டிய தோனி ஆட்டத்தை சிஎஸ்கேவின் கைகளில் எடுத்துவர 18வது ஓவரை சிறப்பாக வீசிய ஆவேஷ் கான், கடைசி 2 ஓவருக்கு 24 ரன்கள் என இழுத்துப்பிடித்தார்.19வது ஓவரை போட்டியில் 3 ஓவரில் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவி பிஸ்னோய்க்கு ரிஷப் பண்ட் கொடுப்பார் என்று பார்த்தால், ஷர்துல் தாக்கூரின் கைகளில் பந்தை கொடுத்து தவறான முடிவை எடுத்தார்.

கேப்டனாக ரிஷப் பண்ட் செய்த இந்த தவறு லக்னோ அணியை தோல்வியின் பக்கம் கொண்டு சென்றது. முக்கியமான தருணத்தில் நோ பால் வீசிய ஷர்துல் தாக்கூர் அதில் சிக்சரையும் விட்டுக்கொடுக்க 19வது ஓவரில் மட்டும் 19 ரன்களை அடித்தது சிஎஸ்கே. கடைசி 6 பந்துக்கு 5 ரன்கள் என போட்டி மாற, 11 பந்தில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 236 ஸ்டிரைக் ரேட்டில் 26 ரன்கள் அடித்த தோனி சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.தனியாளாக சிஎஸ்கேவிற்கு வெற்றியை தேடித்தந்த தோனி 6 வருடத்திற்கு பிறகு ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். 6 வருடத்திற்கு பிறகு ஆட்டநாயகன் விருதை வென்றாலும் அதிக ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலியின் சாதனையை சமன்செய்து அசத்தினார் தோனி.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *