உங்கள் வெற்றி, சென்னை வரை எதிரொலிக்கிறது – தென் ஆப்பிரிக்க அணிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

Advertisements

உங்கள் வெற்றி, சென்னை வரை எதிரொலிக்கிறது என்று, தென் ஆப்பிரிக்க அணிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு வாழ்த்துக்கள் என்றும், அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு அணியை தகுதியான வெற்றிக்கு அழைத்துச் சென்ற பவுமாவுக்கு சிறப்பு பாராட்டுகள் என்றார்.

மேலும், மார்க்ராமின் கோப்பை வென்ற சதத்தைப் பற்றி குறிப்பிடாமல் பாராட்டு முழுமையடையாது என்றும், லார்ட்ஸில் உங்கள் வெற்றி ஜோகன்னஸ்பர்க்கில் மட்டுமல்ல, தொலைதூர சென்னையிலும் மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *