பாஜகவின் நோக்கம் வன்முறையா? – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வன்னியரசு பேட்டி!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வன்முறையை, பதற்றத்தை, மதக்கலவரத்தைத் தூண்டும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதாக அமைச்சர் வன்னியரசு குற்றஞ்சாட்டியுள்ளார்.

உவமைக் கவிஞர் சுரதாவின் 106ஆவது பிறந்த நாளையொட்டிச் சென்னை அசோக் நகரில் உள்ள அவரின் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டுள்ள உருவப்படத்துக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அமைச்சர்கள் ராஜ்மோகன், வெங்கட ரமணன், வன்னியரசு ஆகியோர் சுரதா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னியரசு, தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசுதான் நடக்கிறது என்பதற்குத் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசின் செயல்பாடே எடுத்துக்காட்டு என்று தெரிவித்தார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு என்ன நிலைப்பாட்டை எடுத்ததோ அதைத் தான் தவெக அரசும் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *