Tashkent: விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு !

Advertisements

தாஷ்கண்ட்டில் விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் ஏராளமானோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாஷ்கண்ட்:  உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கண்ட்டில் விமான நிலையம் உள்ளது. இதன் அருகே உள்ள சுங்க கிடங்கில் நள்ளிரவு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதுபற்றித் தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.

இந்தக் குண்டு வெடிப்பில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்தக் குண்டு வெடிப்பின்போது அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தீப்பற்றியது. இதில் காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குண்டு வெடிப்புக்கான காரணம்குறித்து விசாரணை நடக்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *