பாமக பொதுச்செயலாளர் நீக்கம் ராமதாஸ் அறிவிப்பு! தொடரும் உள்கட்சி பூசல்

Advertisements

பாமகவில் தந்தை – மகனுக்கும் ஏற்பட்டுள்ள கருத்து மோதல், பணிப்போர் விவகாரத்தை அடுத்து, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் சரவணனை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோரிடையே கருத்து மோதல் என்பது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது, இந்த மோதல் உச்சக் கட்டத்தை எட்டி உள்ளது. இதனால், பாமக கட்சியில் உள்ள நிர்வாகிகள் ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரு அணிகளாக பிரிந்து உள்ளதை அடுத்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அன்புமணி அணியில் உள்ள பாமக நிர்வாகிகளை நீக்கி வருகிறார்.

இந்த நிலையில், பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணனை நீக்கி மாணவர் அணி அமைப்புச் செயலராக இருந்த வடிவேல் சங்கரை நியமனம் செய்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, முரளி சங்கருக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஜூன் 15 அவருக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியில் இளைஞர் அணி பதவிக்கு வேறு நபரை நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று பாமக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாமக இருஅணிகளாக பிரந்து செயல்பட்டுவரும் நிலையில் தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாமக இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சியை கைப்பற்றும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த, உத்தண்டியில் பாமக ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்றது. இதில், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பொருளாளர் திலகபாமா மற்றும் தென் மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் பேசிய தமிழகத்தில் 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமையும் என பாமக தலைவர் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார்.

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது முக்கியமில்லை வெற்றி பெற வேண்டும் என்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் கணிசமாக பாமக வெற்றி பெற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை செயல்படுத்த இருக்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு செய்ய முதல்வருக்கு விருப்பமில்லை. தமிழகத்தில் சமூகநீதி என்றால் என்னவென தெரியாத தமிழக அரசு இருக்கிறது. ஆனால், சமூகநீதியில் பிஎச்டி படித்திருக்கிறோம். சமூகநீதி என்றால் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் கொள்கைகளை கடைப்பிடித்து முன்னேறுவோம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழ்நாட்டு மக்கள் திமுகவை வீழ்த்தப் போவது உறுதி என்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் டிடிவி.தினகரன் தெரிவித்தாா். சிதம்பரத்தில் செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். பாஜக கூட்டணியால்தான் பாமக தொடா்ந்து இருந்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. விவசாயிகள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், நெசவாளா்கள், பகுதி நேர ஆசிரியா்கள் என அனைத்துத் தரப்பினரும் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக ஆட்சியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

எவ்வளவு பெரிய கூட்டணியாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் திமுகவை வீழ்த்த போவது உறுதி. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றியைத் தருவார்கள் என்றாா் டிடிவி.தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *